Wednesday, February 4, 2009

முதல் குரல்

கூக்குரல் நான்
பயணிக்கிறேன் ,
கிழிபட்ட இதயங்களின்
ஒட்டு மொத்த
பிரதிநிதியாய் !

முல்லைதீவிலிருந்து
உங்கள் முற்றம் வரை.

எமது அழுகுரலின்
அழுத்தம் இறுகி கிடக்கும்
உங்கள் இதய கதவுகளை
தட்டுமாய் !

முத்து குமரா
எனக்காக மரித்தாய் !
அறிக்கை அரசியலுக்கு
முன்னால்
அறிந்து கொண்டோம்
உண்மை தமிழனை.
எங்கள் இறப்பு மறுக்க
இறக்க துணிந்த
மாணவர்களே !

அதோ தலைவர்!
தமிழுக்காய் உயிர் விடுவார் !
தொலைகாட்சியில் கண்ணீரோடு
கண்டதுண்டு.

அறிக்கைகள் பல விட்டு
குழுக்கள் பல கூடி
ஐயோ பாவம் !
உடம்பு முடியவில்லை!
படுத்து கொண்டார் ,
கடைசியில்.

போதும் போதும் !
உங்கள் அறிக்கைகள்
எங்கள் முளையிலந்த
தாய்களின் மானம்
காக்காது!

கற்பிழந்த என்
தமக்கையின்
கண்ணீர் துடைக்காது

புதைந்த என் மகவின்
புன்சிரிப்பு
தராது!

தமிழ் மூச்சு ! தமிழ் பேச்சு !
தமிழால் வாழ்ந்தவர்களே ,
தமிழ் புதைகிறது,
சமாதி எழுப்புவது யார்
என்று போட்டி போடுங்கள்.
வருடா வருடம்
நினைவு நாள் கொண்டாடுங்கள்.

Saturday, May 10, 2008